கர்தினாலின் காட்டமான அறிக்கையினால் அதிர்ந்தது அரசாங்கம்!

அமெரிக்காவுடனான மில்லேனியம் சவால் ஒப்பந்தம் குறித்து காட்டமான அறிக்கை ஒன்றை கர்திகால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றம் மற்றும் பொதுமக்களின் அனுமதியின்றி இந்த ஒப்பந்தத்தை செய்துகொண்டால் மிகப்பெரிய ஆபத்து நாட்டிற்கு ஏற்படும் என்றும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மகாநாயக்க தேரர்களுடன் கடந்த மே மாதம் நடைபெற்ற கலந்துரையாடலிலும் பொதுமக்களின் கருத்துக்கணிப்பின்றி இந்த ஒப்பந்தத்தை செய்துகொள்ளக்கூடாது என்பதையே வலியுறுத்தியிருந்ததாக சுட்டிக்காட்டியுள்ளார் கர்தினால் ஆண்டகை.

ஜனாதிபதி தேர்தலுக்காக முழு நாடுமே தற்போது தயாராகி வருகின்ற நிலையில் இவ்வாறு ஒப்பந்தமொன்றை அவசர அவசரமாக செய்துகொள்வது எந்தவிதத்திலும் தகுதியற்ற செயற்பாடாகும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May also like