தனமல்வில விபத்தில் 30 பேர் காயம்!

வெல்லவாய – தனமல்வில பிரதான வீதியின் குடாஓயா பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் 30 பேர் காயமடைந்துள்ளனர்.

தனியார் பஸ் ஒன்றும் டிப்பர் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து நேர்ந்ததாக தனமல்வில பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் தனமல்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு அவர்களில் 07 பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

You May also like