சம்பந்தனின் தீர்மானத்தை கண்டித்தார் விக்னேஸ்வரன்!

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிக்க இலங்கை தமிழரசுக் கட்சி எடுத்த தீர்மானம் மனவருத்தத்தை தருவதாக வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

சஜித் பிரேமதாஸவினால் முன்வைக்கப்பட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் சிங்களம் மற்றும் ஆங்கில மொழியில் முன்வைக்கப்பட்டுள்ள சில வாக்குறுதிகள், தமிழ் மொழியில் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும் ஜனாதிபதி தேர்தல் குறித்த முடிவை பல்கலைக்கழக மாணவச் சமூகத்துடன் பேச்சு நடத்திய பின்னரே வெளியிடுவதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

You May also like