சஜித் பிரேமதாஸ இன்று மக்களுக்கு விடுத்த அதிரடி அறிவிப்பு!

பொதுமக்களின் நேரடி விருப்பமின்றி புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தை செய்யமாட்டேன் என்று புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாஸ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்றைய தினம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டு சஜித் பிரேமதாஸ இதனைக் கூறினார்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கற் பணிகளை நாடாளுமன்றத்திற்கு மாத்திரம் வரையறுக்காமல், மக்களின் கருத்துக்கு அனுமயளித்து தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதாக உறுதியளித்த அவர், அனைவரும் இலங்கைப் பிரஜை என்ற உணர்வை ஏற்படுத்தும் புதிய அரசியலமைப்பிற்கான பிரகடனத்தை செய்ய அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தனது அரசாங்கத்தின் கீழ் எந்தவொரு ஊழல் அரசியல்வாதிகளுக்கும் சந்தர்ப்பத்தை வழங்கப்போவதில்லை என்றும் அவர் கூறினார்.

அதேபோல, ஊழல் மோசடிகள் பற்றி விசாரணை நடத்தும் விசேட பிரிவொன்றை ஜனாதிபதி செயலகத்தில் உருவாக்கப்போவதாகவும் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இதேவேளை, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைப் பெறும் ஒரு பிரதமரையே தனது ஆட்சியின்கீழ் நியமிக்கப்போவதாகவும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

You May also like