கோட்டாவின் இந்திய விஜயத்தில் இவ்வளவு பேரா பங்கேற்பார்கள்?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முதல் வெளிநாட்டு பயணத்தில் மிகவும் குறைந்த தூத்துக்குழு பங்கேற்கும் என தெரியவருகிறது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் எதிர்வரும் 29ம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாரதம் செல்கின்றார்.

வரும் முதலாம் திகதி அவர் நாடு திரும்புவார் என்று கூறப்படுகிறது.

இந்த விஜயத்தில் 08 பேர் பங்கேற்கவுள்ளதாக உயர்மட்ட தகவல்கள் கூறுகின்றன.

இதற்கமைய, ஜனாதிபதி செயலாளர் பி.பீ ஜயசுந்தர, வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளரான லலித் வீரதுங்க உள்ளிட்டோர் இடம்பெறுவார்கள் என்றும் அறியமுடிகிறது.

 

You May also like