பாணந்துரையில் தமிழ் மொழி சேர்க்கப்பட்டது

கொழும்பின் புறநகர் பகுதியான பாணந்துரை நகரில் தமிழ் எழுத்து அகற்றப்பட்ட வீதிப் பெயர் பலகைக்கு எதிராக எழுந்த எதிர்ப்பை அடுத்து அந்த வீதிப் பெயர் பலகையில் தமிழ் மொழி சேர்கப்பட்டுள்ளது.

பணந்துரை நகரில் சுசந்த மாவத்தை என்கிற வீதியின் பெயர் பலகை சிங்கள மற்றும் ஆங்கிலம் மொழிகளில் காணப்பட்டதோடு, தமிழ் மொழியிலான பெயர் நீக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் மற்றும் பிரதமர் வரை சென்ற இந்த முறைப்பாட்டின் பின்னர் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

 

You May also like