இராஜாங்க அமைச்சர்களின் பதவிப்பிரமாணம் ஒத்திவைப்பு

இராஜாங்க அமைச்சர்களின் பதவிப்பிரமாண நிகழ்வு நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

(UPDATE)

இராஜாங்க அமைச்சர்கள் இன்று நியமனம்; சு.கவுக்கு அழைப்பில்லை?

இடைக்கால அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர்களின் பதவிப்பிரமாணம் இன்று திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று முற்பகலில் இந்நிகழ்வு நடைபெறவிருக்கிறது.

இதேவேளை அமைச்சர்களின் நியமனங்கள் கடந்த வாரம் இடம்பெற்றன.

ஏற்கனவே, 05 அமைச்சுக்களை வழங்குவதாக சுதந்திர கட்சிக்கு ஜனாதிபதி வாக்குறுதி செய்திருந்ததாகவும், ஆனால் 02 அமைச்சுக்களை மட்டுமே ஜனாதிபதி வழங்கியிருப்பதால் பெரும் குழப்பத்திற்கு சுதந்திர கட்சியின் தல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இன்று நடக்கவுள்ள இராஜாங்க அமைச்சர்களின் பதவிப்பிரமாணம் நிகழ்வுக்கும் நேற்று வரை சுதந்திர கட்சியினருக்கு அழைப்பு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

 

You May also like