அதிக எடைகொண்ட சிறுநீரகமொன்று நோயாளரிடமிருந்து அகற்றப்பட்ட சம்பவம் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுநீரக நோயாளர் ஒருவரை அண்மையில் சத்திரகிசிச்சைக்கு உட்படுத்திய மருத்துவர்கள் இந்த ஆச்சரியமான சம்பவத்தை அவதானித்துள்ளனர்.
சாதாரணமாக சிறுநீரகமொன்றின் எடையானது 120 தொடக்கம் 150 கிராம் வரை கொண்டிருக்கும்.
ஆனால் குறித்த நோயாளரிடம் இருந்து அகற்றப்பட்ட சிறுநீரகத்தின் எடையானது 7.4 கிலோ கிராம் என்கின்றனர் மருத்துவர்கள்.
இந்தியாவின் டில்லியிலுள்ள ஸ்ரீ கங்கா ராம் தனியார் மருத்துவமனையில் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கிறது.