வெள்ளைவேன் கடத்தல்; மஹிந்தவை சந்திக்கிறார் சுவிஸ் தூதுவர்!

வெள்ளைவான் கடத்தல் சம்பவம் குறித்து சுவிட்சர்லாந்து தூதுவர் ஹான்ஸ்பீட்டர் மோக், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.

கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் நேற்று முன்தினம் வெள்ளை வான் ஒன்றில் கடத்தப்பட்டு சில மணிநேரம் கழித்து விடுவிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குற்றப்புலனாய்வு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த டி சில்வா கைது செய்யப்பட இருந்த நிலையில் சுவிட்சர்லாந்துக்கு சென்றதை அடுத்து அவருக்கு வழங்கப்பட்ட வீசா குறித்தே அந்த பெண் பணியாளரிடம் விசாரணை செய்ததாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று நேரில் சந்தித்து பேச்சு நடத்த சுவிஸ் தூதுவர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்க்கப்படுகிறது.

 

You May also like