அரச உயர் அதிகாரிகளுடன் இன்று இந்தியா பறக்கிறார் கோட்டா!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று தனது முதலாவது வெளிநாட்டு விஜயத்தை மேற்கொள்கிறார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி கோட்டாபய இன்று வியாழக்கிழமை இந்தியா செல்கின்றார்.

இந்திய விஜயத்தின் போது அந்நாட்டு ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முக்கியமான அமைச்சர்களை சந்திக்கவுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபயவுடன் இந்த விஜயத்தில் அவரது செயலாளர் பி.பீ ஜயசுந்தர, வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியவன்ச, நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் ஆர்டிகல, ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார, ஜனாதிபதி ஆலோசகர் லலித் வீரத்துங்க ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

 

You May also like