வெள்ளத்தில் மூழ்கிய கொழும்பு வீதிகள்!

கொழும்பில் இன்று மாலைமுதல் பெய்துவரும் கடும் மழை காரணமாக சிறிய மற்றும் தாழ்நில வீதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன.

இதன்படி பொறளை விஜேராம வீதி வெள்ளத்தில் மூழ்கியிருப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தும்முல்ல, ஹோட்டன் பிளேஸ், பேஸ்லைன் வீதி, மைக்கல் சுற்றுவட்டம் ஆகிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

வெள்ள நீர் வீதிகளில் தேங்கியிருப்பதால் சில வீதிகளில் போக்குவரத்து நெரிசல் நிலை ஏற்பட்டிருக்கின்றது.

You May also like