சுவிஸ் தூதுவர் பற்றி அரசாங்கம் வெளியிட்ட தகவல்!

சுவிட்சர்லாந்து தூதுவருடன் எந்தவொரு முரண்பாட்டு நிலையும் தங்களுக்கு இல்லை என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின் ஊடகவியலாளர் மத்தியில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் கூறினார்.

சுவிஸ் தூதரக பெண் பணியாளர் கடத்தப்பட்ட விவகாரம் குறித்து தூதுவர் பலதடவை வெளிவிவகார அமைச்சுக்கு வந்து கலந்துரையாடல் நடத்தியதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த விசாரணை தற்போது நேர்த்தியாக இடம்பெற்று வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

You May also like