ஷாபி மருத்துவர் விவகாரம்: குருநாகல் வைத்தியசாலைக்கு சி.ஐ.டி விஜயம்!

சுமார் 4000 தாய்மாருக்கு கர்ப்பத்தடை சத்திரசிகிச்சையை மேற்கொண்டதா குற்றஞ்சாட்டப்பட்டுள்ள குருநாகல் வைத்தியசாலை மருத்துவர் மொஹமட் ஷாபி தொடர்பிலான விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.

இதற்காக விசேட விசாரணைக் குழுவொன்று இன்று செவ்வாய்க்கிழமை குருநாகல் வைத்தியசாலைக்கு விஜயம் செய்திருக்கின்றது.

கடந்த அரசாங்கத்தினால் இதுகுறித்த விசாரணை சரியான வகையில் நடத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு மத்தியில், மீள் விசாரணைக்கான அனுமதியை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு நீதிமன்றம் அண்மையில் வழங்கியிருந்தது.

இந்நிலையிலேயே தற்சமயம் துரித விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May also like