ஏ-9 வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம்: தடுக்கச்சென்ற பொலிஸாருடன் மோதல்!

கிளிநொச்சி மாவட்டத்தில் சோரன்பற்று கிளாலி மற்றும் அரத்திநகர் அல்லிப்பளை பகுதிகளில் சட்டவிரோத மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த கோரி நெடுச்சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

ஏ-9 நெடுச்சாலையை பளை பகுதியில் மறித்து இன்று காலை குறித்த போராட்டம் மக்கள் நடத்தப்பட்டது.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச மணல் அனுமதிப் பத்திரம் தொடர்பில் வெளியிட்ட அறிவித்தலின் பின் வடக்கில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு மணல், கிரவல், கல் என்பன சட்டவிரோதமான முறையில் மிதமிஞ்சி கொள்ளையிடப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே மேற்படி நெடுச்சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஏ-9 வீதியூடாக பயணித்த டிப்பர் வாகனங்களையும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதுடன் போரட்டகளத்தில் மக்களுக்கும் பொலீசாருக்கும் இடையில் முரண்பாடுகளும் ஏற்பட்டது.

போராட்டத்தின் முடிவில் பச்சிளைப்பள்ளி பிரதேசசெயலாளர் பரமோதயன் ஜெயராணிக்கு மக்கள் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

அத்துடன் மக்கள்மண் அகழ்வுகள் மீண்டும் இடம் பெறும் பட்சத்தில் நாம் மீண்டும் போராடுவோம் என்று கூறினார். இந்த போராட்டத்தில் பொதுமக்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனதுடனர்.

Thanks – Thinakkural

You May also like