மத்தள விமான நிலையம்: அரசாங்கம் எடுத்த மற்றுமொரு முடிவு!

மைத்திரி-ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் மத்தள சர்வதேச விமான நிலையத்தில் ஏற்படுத்தப்பட்ட சேதங்கள் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை சிவில் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார்.

கடந்த ஆட்சிக்காலத்தில் அம்பாந்தோட்டை – மத்தள சர்வதேச விமான நிலையத்தை நெல் களஞ்சியத்திற்காக பயன்படுத்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது நெல் களஞ்சியப்படுத்தப்பட்ட பகுதியில் ஏற்பட்ட சேதம் மற்றும் முழு விமான நிலையத்திற்கும் ஏற்படுத்தப்பட்ட சேதவிபரங்களை அமைச்சர் ரணதுங்க கோரியிருக்கின்றார்.

You May also like