வெலிக்கடை சிறைக்கு சென்ற மர்ம வாகனம் இவருடையதா?!

கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்கு நேற்று வந்த இலக்கத்தகடு அற்ற வாகனம் யாருக்கு சொந்தமானது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா அந்தக் காரின் உரிமையாளர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவை சந்திக்க விஜயமுனி சொய்சா எம்.பி நேற்று மாலை வெலிக்கடை சிறைக்கு சென்றார்.

அவர் பயணித்த வாகனத்தில் இலக்கத்தகடு இல்லாதிருந்தமை குறித்து விமர்சனம் எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

படம்; தெரண

 

You May also like