முச்சக்கர வண்டி வாடகைக் கட்டணம் அதிரடியாக குறைப்பு!

முச்சக்கர வண்டிகளின் வாடகை கட்டணம் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி 60 ரூபாவாக உள்ள ஆரம்ப வாடகை கட்டணம் 50 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக சுயதொழில் புரியும் முச்சக்கர வண்டி சங்கத்தின் தலைவர் சுனில் ஜெயவர்த்தன தெரிவித்தார்.

அத்தோடு ஒரு கிலோ மீட்டருக்கு அடுத்து அறவிடப்படும் கட்டணமான 45 ரூபாவானது 40 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

வரி கட்டனக் குறைப்பின் பின்னர் முச்சக்கர வண்டிகளின் உதிரிப்பாகங்களின் விலைகளும் குறைக்கப்பட்டத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டணத் திருத்தம் செய்திருப்பதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.

இந்த கட்டண மாற்றம் எதிரவரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May also like