முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சிறைச்சாலை மருத்துவமனைக்கு மாற்றம் செய்வதற்கான தீர்மானம் இறுதியில் இரத்து செய்யப்பட்டதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
கொழும்பு தனியார் மருத்துவமனையில் ராஜித எம்.பி சிகிச்சை பெற்றுவருகின்றார்.
இந்நிலையில் இன்று பிற்பகல் 02 மணிக்கு அவரை கொழும்பு வெலிக்கடை சிறை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இருந்த போதிலும் அவரது உடல் நலம் இறுதியில் மோசமாக இருப்பதால் சிறை அதிகாரிகளின் கோரிக்கையை குறித்த தனியார் மருத்துவமனை நிராகரித்ததாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சம்பந்தமான வழக்கு நாளை திங்கட்கிழமை கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.