சுவிஸ் தூதரக பெண் நீதிமன்றில் இன்று ஆஜர்!

விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ள கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரக பெண் பணியாளர் கார்னியா நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

வெள்ளைவானில் தன்னை கடத்தி விசாரணை செய்ததாக அவர் அளித்த புகாரை அடுத்து விசாரணைகளை நடத்திய சீ.ஐ.டியினர் குறித்த புகார் பொய் எனக்கூறி அவரைக் கைது செய்தனர்.

கடந்த 16ம் திகதி கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றினால் இன்று வரை அவருக்கு விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இன்றைய தினம் குற்றப்புலனாய்வு பிரிவினால் தூதரக பெண் சம்பந்தமான மனநிலை மருத்துவ அறிக்கை ஒன்றும் மன்றில் சமர்பிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

 

You May also like