ஆஸி காட்டுத்தீ: சிவப்பு நகரமாக மாறியது கடலோர நகரம் (PHOTOS)

அவுஸ்திரேலியாவில் கொளுந்துவிட்டு எரியும் காட்டுத்தீயின் தாக்கம் தற்போது விக்டோரியா நகரான மல்லேகியூட்டாவை அண்மித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒருமாதகாலமாக எரிந்துவருகின்ற அவுஸ்திரேலிய காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் அந்நாட்டு அதிகாரிகள் தீவிரமாக தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் விக்டோரியா நகரான மல்லேகியூட்டா நகரை காட்டுத்தீ இன்று காலை அண்மித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடலோரப் பிரதேசமான மல்லேகியூட்டா நகரம் தற்போது காட்டுத்தீ காரணமாக சிவப்பு நகரமாக காட்சியளிக்கின்றது.

சுமார் 310 மைல் தூரத்திற்கு காட்டுப்பகுதி தீயில் கருகியிருப்பதாக தெரிவிக்கின்ற அவுஸ்திரேலிய அதிகாரிகள், மல்லேகியூட்டா கடலோரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதுவரை 10 பேரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதோடு பலர் காயமடைந்திருப்பதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

You May also like