இந்தியா செல்கிறார் அமைச்சர் தினேஸ்!

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இதன்படி எதிர்வரும் 09ஆம் 10ஆம் திகதிகளில் இந்தியாவுக்கான தனது விஜயத்தை வெளிவிவகார அமைச்சர் ஆரம்பிக்கின்றார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்ட தினேஸ் குணவர்தனவின் முதலாவது வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கான விஜயம் அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May also like