மங்களவுக்கு வெட்டு?

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலக தீர்மானித்துள்ளார் என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் தனது நெருங்கிய நண்பர்களிடம் கூறியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் அமெரிக்க ஒப்பந்தம் குறித்து முன்னாள் அமைச்சர் மங்கள மேடைகளிலும் பேசியிருந்தார்.

அதேபோல இலங்கை ஒரு பெளத்த நாடே கிடையாது என்று தெரிவித்த மங்கள எம்.பியின் கருத்தால் மகாநாயக்க தேரர்கள் முதல் சிங்கள மக்களும் கொதிப்படைந்தனர்.

இப்படியான சூழலில் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியில் அவரை போட்டியிட சந்தர்ப்பம் வழங்குவது கட்சியின் தோல்விக்கே வழிவகுக்கும் என்ற எண்ணத்தில் சஜித் அணியினர் இருப்பதாக கூறப்படுகிறது.

 

You May also like