விசேட அதிரடிப் படை முகாமில் தீ!

களுத்துறை – கட்டுகுருந்த பொலிஸ் விசேட அதிரடிப் படையின் முகாமில் இன்று பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

விசேட அதிரடிப் படையின் இரண்டாவது மாடியில் ஏற்பட்ட தீ தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த தீ விபத்தினால் எவருக்கும் காயம் மற்றும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.

மின் ஒழுக்கே இந்த தீ பரவலுக்கு காரணம் என அறியப்பட்டுள்ளதோடு விசாரணைகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

You May also like