இலங்கை வருகிறார் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் அழைப்பை ஏற்று சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் நேற்று அவரது இல்லத்தில் வைத்து சந்தித்திருந்தார்.

இந்த சந்திப்பின்போது வடக்கிற்கு விஜயம் செய்யுமாறு விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்திருக்கின்றார்.

வடமாகாணத்தில் தமிழ் மக்களின் வாழ்க்கை நிலை, பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு கலை, கலாசார விடயங்கள் குறித்தும் இதன்போது பேசப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் விடுக்கப்பட்ட அழைப்பை ரஜினிகாந்த் ஏற்றுக்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்வதாக கூறியுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

You May also like