இலங்கைக்கு புதிய இந்திய தூதுவர் விரைவில்?

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரின் பதவியில் விரைவில் மாற்றம் ஏற்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தின் உயர்ஸ்தானிகராக தரஞ்ஜித் சிங்கசந்து கடமையாற்றிவருகின்றார்.

இந்நிலையில் இந்தியப் பிரதமர் மோடியின் அலுவலகத்தில் பதில் செயலாளராக கடமைபுரிந்துவரும் கோபால் பக்லி இலங்கைக்கான தூதுவராக விரைவில் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேபோல தற்போது இலங்கைக்கான உயர்ஸ்தானிகராக சேவையாற்றிவரும் தரஞ்ஜித் சிங் சந்து, அமெரிக்காவுக்கான இந்தியத் தூதுவராக நியமிக்கப்படவுள்ளதாகவம் கூறப்படுகின்றது.

கோபால் பக்லி இதற்கு முன்னர் இந்திய வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May also like