பொங்கல் தினத்தில் பதுளை தோட்டத்தில் மோதல்: 14 பேர் காயம்!

தைப்பொங்கல் தினமான நேற்று மாலை பதுளையில் தமிழ் இளைஞர்களிடையே இடம்பெற்ற குழு மோதலில் 14 பேர் காயமடைந்துள்ளனர்.

மோதலில் காயமடைந்தவர்கள் அனைவரும் பதுளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருப்பதாக பதுளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ரில்பொல – வேவல்ஹின்ன தோட்டத்தில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றிருக்கிறது.

சாதாரண கருத்துமாறலே பின்னர் கைகலப்பாக உருவெடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களில் இரண்டு பெண்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

You May also like