நீதிமன்ற வளாகத்தில் ரஞ்ஜன் அதிரடியாக வெளியிட்ட தகவல்!

திருடர்கள் ஒன்றுசேர்ந்து தன்னை சிறைதள்ளியிருப்பதாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

நுகேகொடை நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் முன்னிலைப்படுத்துவதற்காக அழைத்துச்சென்றபோது நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களுக்கு முன்பாக அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ரஞ்ஜன் ராமநாயக்கவினால் பதிவுசெய்யப்பட்டதாகக் கூறப்படும் குரல் பதிவுகள் அம்பலமாகி தென்னிலங்கையில் தற்போது பாரிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

பிரபல வழக்குகளை விசாரணை செய்யும் சட்டத்தரணிகள், நீதிபதிகள் உட்பட பிரபல நடிகைகளுடன் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்க தொலைபேசியில் உரையாடிய கலந்துரையாடல் எனக்கூறப்பட்டு பலவித குரல் பதிவுகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவிவருகின்றன.

இந்நிலையில் நீதவான் தம்மிக ஹேமபாலவின் சேவையை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நீதிச் சேவைகள் ஆணைக்குழு நேற்றைய தினம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் பொங்கல் தினத்தன்று மீண்டும் கைது செய்யப்பட்ட நாடாளும்னற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்க நுகேகொடை நீதவான் நீதிமன்றத்திற்கு சிறைச்சாலை அதிகாரிகளினால் பாதுகாப்புக்கு மத்தியில் அழைத்துவரப்பட்டார்.

சிறைச்சாலை பிரதான நுழைவாயிலில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிட்ட ரஞ்ஜன் ராமநாயக்க, இலங்கையில் திருடர்களைப் பிடித்துக்கொடுப்பதானது கழுத்தை பணயத்திற்கு வைப்பதற்குச் சமமாகும் என்று கூறினார்.

மேலும் திருடர்கள் ஒன்றுசேர்ந்து தன்னை சிறைதள்ளியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நீதிபதிகளுக்கு அழுத்தம் கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் தற்போது ரஞ்ஜன் ராமநாயக்க கைது செய்யப்பட்டிருக்கின்ற அதவேளை, அவருடன் தொலைபேசியில் உரையாடியதாக சந்தேகிக்கப்படும் பத்மினி ரணவக்க, கிஹான் பிலப்பிட்டிய உள்ளிட்ட சிலர் குறித்து விரைவில் தீரமானம் எடுப்பதாக நீதிச் சேவைகள் ஆணைக்ழுழு தெரிவித்துள்ளது.

You May also like