நாடு முழுவதிலும் அரிசி தட்டுப்பாடு?

நாடு முழுவதிலும் நாட்டரிசி மற்றும் சிவப்பு அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த அரிசி வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டதில் இருந்து இதுவரை சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

100 ரூபாவுக்கு மட்டுப்படுத்தப்பட்ட போதிலும் இந்த அரிசி வகைகளின் விலை 100 ரூபாவையும் கடந்து விற்பனை செய்யப்படுவதாக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

அதேபோல கீரி சம்பா மற்றும் சம்பா அரிசி வகைகளே அதிகமாக சந்தையில் காணப்படுவதால் மேற்குறித்த அரிசி வகைகளின் விலையேற்றத்திற்கு காரணமாக அமைவதாக வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

You May also like