சீன வைரஸ் இலங்கையை தாக்கும் அபாயம்?

சீனாவில் வேகமாக பரவிவருகின்ற அடையாளம் கண்டிராத புதிய வகை வைரஸ் குறித்து சுகாதார அமைச்சு தனது கவனத்தைத் திருப்பியள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனம் இதுகுறித்த எச்சரிக்கையை அனைத்து நாடுகளுக்கும் அனுப்பிவைத்துள்ளது.

சீனாவின் வுஹென் பகுதியில் இந்த வைரஸின் தாக்கம் வேகமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அங்கு இதுவரை 40க்கும் அதிகமானவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 45க்கும் அதிகமான ஆய்வுகூடங்களில் நடத்தப்பட்ட பரிசோதனையின் முடிவாக இதுவொரு வைரஸ் காய்ச்சல் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பரில் தொடங்கிய இந்த வைரஸ் காய்ச்சலின் தாக்கம் சீனாவின் இதர பகுதிகளுக்கும் பரவி உலகத்தையே அச்சுறுத்தும் நிலைக்கு வரலாம் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

You May also like