பதுளை விமான விபத்து;விசாரணை அறிக்கை எங்கே?

பதுளை – ஹப்புத்தலை பிரதேசத்தில் இடம்பெற்ற விமான விபத்து தொடர்பான விசாரணை அறிக்கை இன்னும் விமானப்படைத் தளபதிக்கு கையளிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானப்படை ஊடகப் பேச்சாளர் குரூப் கேப்டன் செனவிரத்ன எமது True News Tamil செய்தி இணையத்தளத்திற்கு இதனை தெரிவித்தார்.

கடந்த ஜனவரி 03ம் திகதி காலை இலங்கை விமானப்படைக்கு சொந்தமான Y-12 ரக விமானம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போது ஹப்புத்தலை மலையில் விழுந்து நொறுங்கியது.

இதில் 04 பேர் பலியானத்தோடு ஒருவர் காயமடைந்திருந்தார்.

இந்த விபத்து குறித்து பல தகவல்கள் வெளியாகின.

குறிப்பாக இந்த விமானம் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட வேண்டியதாக இருந்தாலும் அதனை படை அதிகாரிகள் பயன்படுத்த அனுமதித்ததாக கூறப்பட்டது.

இருப்பினும் விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய 05 பேர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டு இறுதியில் அறிக்கை தயாரித்து விமானப்படைத் தளபதியிடம் கையளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், விபத்து இடம்பெற்று 2 வாரங்கள் ஆகின்ற போதிலும் இதுவரை விசாரணை அறிக்கை கையளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

You May also like