அசாத் சாலி மீண்டும் சிக்கலில்!

உயிர்த்த ஞாயிறு தினத்தில் தாக்குதல் சம்பவம் குறித்து மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி வழங்கிய சாட்சிகள் ஒன்றுக்குகொன்று முரண்பட்டு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து அவர் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வழங்கிய சாட்சியத்திற்கும், ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வழங்கிய சாட்சியத்திற்கும் இடையே வித்தியாசம் காணப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.

இதுகுறித்து அரச சிரேஷ்ட சட்டத்தரணி சுஹர்ஷ ஹேரத் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் நேற்று தெரிவித்திருக்கின்றார்.

You May also like