யாழில் பல்கலை மாணவி கழுத்தறுக்கப்பட்டு கொலை!

யாழ்.பண்ணை கடற்கரையில் யாழ்.பல்கலைகழக மாணவி ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று பகல் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில், மாணவியை கொலை செய்து விட்டு, கொலையாளி தப்பிச் சென்றபோது அப்பகுதியில் கடமையிலிருந்த விமானப்படை புலனாய்வு பிரிவினர் அவரைத் துரத்தி சென்று கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

குறித்த நபரை பொலிஸார் யாழ்.பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் யாழ் பிரதேச இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ வீரர் எனத் தெரிய வருகிறது.

You May also like