ரஞ்ஜன் பொய்கூறிவிட்டார்: பிரதி சபாநாயகர் அறிவிப்பு (VIDEO)

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்கவினால் இதுவரை எந்தவொரு குரல் பதிவும் சபைப்படுத்தப்படவில்லை என்று பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்த போதே அவர் இதனைக் கூறினார்.

சர்ச்சைக்குரிய குரல் பதிவுகளை சபைப்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்க நேற்றும் அதேபோல நேற்று முன்தினமும் நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருந்த போது குறிப்பிட்டிருந்தார்.

எனினும் அவர் இதுவரை எந்த குரல் பதிவுகளையும் இறுவெட்டுக்களையும் சபையில் சமர்பிக்கவில்லை என்ற அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VIDEO SOURCE: Twitter

You May also like