1000 ரூபாவுக்காக மஹிந்தானந்த – திலகராஜ் மோதல்!

பெருந்தோட்டக் கம்பனிகள் நட்டம் அடைந்து வருவது பொய் என்று தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, அந்த நிறுவனங்களின் பங்குச் சந்தை விலைகள் அதிக இடத்திலேயே உள்ள என்றும் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் இன்று மாலை உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

மார்ச் முதலாம் திகதிமுதல் 1000 ரூபா சம்பள அதிகரிப்பை தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்தார்.

இந்த உரையினிடையே இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ் மயில்வாகனத்திற்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

எவ்வாறாயினும், நாடாளுமன்றில் இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் உரைக்கு பதிலளித்து உரையாற்றிய நாடாளுன்ற உறுப்பினர் திலகராஜ் மயில்வாகனம், இப்போது 700 ரூபா சம்பளமே தோட்டத் தொழிலாளர்களக்கு வழங்கப்படுவதாகவும், 300 ரூபா அதிகரிப்பையே அரசாங்கம் தற்போது மேற்கொள்ளப்போவதாகவும் குறிப்பிட்டார்.

அரசாங்கம் தெரிவித்த 1000 ரூபா சம்பள உயர்வு குறித்த அறிவிப்பு மகிழ்ச்சியைத் தருகின்ற போதிலும் கூட்டு ஒப்பந்த முறையை நீக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.

இந்த விவாதத்தில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர் திகாம்பரம், மனோ கணேசன், வடிவேல் சுரேஷ், வேலுகுமார் உள்ளிட்டவர்கள் சபைக்கு சமூகமளித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You May also like