உவான் நகரத்தை மூடிய சீனா: அச்சத்தில் மக்கள்!

கொரோனா வைரஸ் தீவிரமடைந்ததை அடுத்து சீனாவின் உபேய் மாகாணத்திலுள்ள உவான் நகரத்திற்கு அந்நாட்டு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

அந்த நகரத்திலுள்ள பாடசாலைகள் உட்பட அரச அலுவலகங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், பஸ் சேவைகள், ரயில் சேவைகள் என அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

அவசர தேவை ஏற்படின் விசேட அனுமதியை சுகாதார அதிகாரிகளிடம் பெற வேண்டும் என்கிற அறிவிப்பும் உபேய் மாகாணத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் காய்ச்சல் சீனாவின் உவான் நகரத்திலேயே ஆரம்பமாகியதாக தெரிவிக்கின்ற அதிகாரிகள் அதனால் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஏனைய நாடுகளுக்கும் பரவ ஆரம்பித்துள்ளது.

You May also like