கொரோனா வைரஸ் இலங்கையில் உள்ளதா? அமைச்சர் பதில்!

கொரோனா வைரஸ் தாக்கம் இதுவரை இலங்கைக்கு ஏற்படவில்லை என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அண்மையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சீனக் குழந்தை ஒன்று காய்ச்சலினால் பீடிக்கப்பட்டமை கண்டறியப்பட்ட நிலையில், ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் அக்குழந்தைக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருக்கவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.

 

You May also like