வெள்ளிக்கிழமை அதிரடி அறிவிப்பை வெளியிட்ட மைத்ரி!

நாட்டின் நன்மை கருதி 19ஆவது திருத்தத்தை இரத்து செய்யும் புதிய அரசியலமைப்பு திருத்தத்திற்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக்கொண்டுள்ளார்.

19ஆவது திருத்தத்திற்கு தானும் எதிர்ப்பாளன் என்று கூறிய அவர், அந்த திருத்தம் காரணமாக நாட்டில் இன்று பல்வேறு குழப்பம் ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

அதனை தாம் செய்திராவிட்டால் இன்றும் தாமே ஜனாதிபதி என்று கூறிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

பொலன்னறுவை கத்துருவெல பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

You May also like