இலங்கையில் முகக் கவசம் அணியுமாறு அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பரவலாம் என்கிற அச்சம் காணப்படுகிற நிலையில் கொழும்புக்கு வருகிறவர்கள் முகத்தை மறைக்கும் துணியிலான (Face Mask) கவசத்தை அணியுமாறு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் அதிகமான சீனப் பிரஜைகள் இருப்பதால் குறித்த வைரஸ் பரவும் அபாயம் நிலவுவதாக கொழும்பு பிரதான வைத்திய அதிகாரி மருத்துவர் ருவன் விஜமுனி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சீனாவில் இருந்து இலங்கை வந்த மேலும் இருவர் கொரோனா வைரஸ் அச்சத்தில் கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

You May also like