ரணில்-சஜித் பேச்சு மீண்டும் தோல்வி; உச்சத்தில் நெருக்கடி!

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையே நேற்று இரவு நடைபெற்ற பேச்சுவார்த்தையும் இணக்கப்பாடு இன்று முடிந்துள்ளது.

கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து முடிவு எடுக்க நேற்று புதன்கிழமை இந்த இருவருக்கும் இடையே சந்திப்பு நடைபெற்றது.

இதில் பொதுத்தேர்தலை இலக்கு வைத்து ஆரம்பிக்கவுள்ள கூட்டணியின் தலைமைத்துவம், செயலாளர் பதவி மற்றும் வேட்பு மனுக்களில் பெரும்பான்மை சஜித் அணியினருக்கே வழங்கப்பட வேண்டும் என கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்டு வந்த கோரிக்கைகளுக்கு கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பதில் அளித்துள்ளார்.

கூட்டணியின் தலைவர் பதவியை மட்டுமே வழங்க முடியும் என்ற தனது இறுதி தீர்மானத்தை ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் சஜித்திடம் கூறியுள்ளார்.

ஏனைய இரு கோரிக்கைகளையும் அவர் நிரகரித்துள்ளார் என அறியமுடிகிறது.

இருப்பினும் தேர்தலில் தனக்கு எதிர்பார்த்த பதவிகள் கிடைக்காதபோது பிரதமர் பதவிக்கு தாம் போட்டியிட முடியாது என்பதை சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அதனால் பிரதமர் பதவிக்கு கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை போட்டியிடுமாறு கோரியுள்ள சஜித், எதிர்வரும் பொதுத் தேர்தலையும் வழிநடத்திக்கொள்ளுமாறும் அதிருப்தியாக கூறிச்சென்றார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

You May also like