பதுளை யுவதிக்கு கொரோனா வைரஸா? வந்தது இறுதி முடிவு!

பதுளை வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்ட இலங்கை யுவதிக்கு அந்த வைரஸ் பிடிக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பதுளை வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் உப்புல் கருணாரத்ன இந்த தகவலை தெரிவித்தார்.

சீனாவில் பல்கலைக்கழகம் ஒன்றில் பயின்ற மொனராகலை பித்தம பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயது மாணவி கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் கடந்த 5ம் திகதி பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் நடத்தப்பட்டமருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.

தொடர்ந்து அவர் விசேட வாகனம் மூலம் வீட்டிற்கு அழைத்துச்செல்லபட்டுள்ளார்.

 

You May also like