போட்டியிடும் சின்னத்தை அறிவித்தார் நாமல்; அதிர்ச்சியில் மைத்ரி!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தாமரை மொட்டுச் சின்னத்திலேயே போட்டியிடப்படும் என இன்று சனிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி பூஜாப்பிடிய பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இதனை தெரிவித்தார்.

கடந்த நாட்களான சுதந்திர கட்சியுடன் பொதுஜன முன்னணி கூட்டணி அமைத்து பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் என பலரும் தெரிவிக்கின்றனர்.ஆனால் தேர்தலுக்கு முன்னதாகவோ அல்லது பின்னரோ கூட்டணி அமைக்கலாம். இருப்பினும் தாமரை மொட்டுச் சின்னத்திலேயே போட்டியிடுவோம் என்று நாமல் ராஜபக்ஷ எம்.பி திட்டவட்டமாக தெரிவித்தார்.

 

You May also like