மோடியை சந்தித்தார் மஹிந்த:பிற்பகல் ஜனாதிபதியை சந்திப்பார்!

நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச, அந்நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.

இச்சந்திப்பு மோடியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இன்று முற்பகல் நடைபெற்றது.

மோடியை சந்திக்கச் சென்ற பிரதமர் மஹிந்தவுக்கு அங்கு விசேட வரவேற்பும் அளிக்கப்பட்டது.

இதேவேளை இன்று பிற்பகலில் அவர் இந்திய குடியரசுத் தலைவரையும் சந்திக்கவுள்ளார்.

You May also like