கோட்டாவின் நியமனத்தை நிராகரிக்கும் ஜெனீவா?அதிரடி அரசியல் ஆரம்பம்!

ஜெனீவாவுக்கான இலங்கையின் தூதுவராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ள சி.ஏ. சந்திரப்பிரேமவை அப்பதவியில் ஏற்பதற்கு சுவிஸ் அரசாங்கம் மறுப்பு தெரிவிக்கலாம் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற பாரதூரமான மனித உரிமை மீறல் சம்பவங்களின் சூத்திரதாரியாக அவர் அடையாளமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக 1980களில் இடம்பெற்ற வன்முறைகளில் மனித உரிமைச் சட்டத்தரணிகள், பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானவர்களின் கொலைக்கு காரணமாக இருந்த இராணுவ ஆதரவு இரகசிய அணியான மரண தண்டனைக் குழுவில் அங்கம் வகித்த ஒருவராக சி.ஏ. சந்திரப்பிரேம இருந்ததாக கூறப்படுகின்றது.

இந்த காரணத்தைக் கொண்டே மேற்படி ஜெனீவா அவரை நிராகரிக்கலாம் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

You May also like