இராஜாங்க அமைச்சர் ஒருவர் விரைவில் கைது?

சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர கைது செய்யப்படவுள்ளார்.
இதற்கான பிடியாணையை கொழும்பு கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை பிறப்பித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் முன்னாள் ஆணையாளர் அல் ஹுசைன் இலங்கைக்கு விஜயம் செய்தபோது அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி பொதுமக்கள் சமாதானத்திற்கு பங்கம் ஏற்படுத்திய குற்றச்சாட்டு அமைச்சர் விமல் வீரவன்ச, இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர உள்ளிட்ட 08 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் ஆஜராக தவறியத்தை அடுத்து இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீரவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

You May also like