இலங்கை கடற்பரப்பில் சென்ற வெளிநாட்டுக் கப்பலில் திடீர் சோதனை

இலங்கை கடற்பரப்பை கடந்து பங்களாதேஷ் சென்று கொண்டிருந்த பிரேஸில் நாட்டிற்குச் சொந்தமான கப்பலில் அதிரடி சோதனை நடத்தப்பட்டுள்ளது.

பிரேஸிலில் இருந்து பங்களாதேஷ் சித்தகன் துறைமுகத்திற்கு சரக்கு கப்பல் ஒன்று இலங்கை துறைமுகத்திலிருந்து சுமார் 13 கிலோ மீற்றர் தூரத்தில் இன்று பயணித்துக் கொண்டிருந்தது.

இந்நிலையில் கடற்படை மற்றும் சுங்க அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த கப்பலில் சோதனை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இந்த சோதனையில் சந்தேகத்திற்கு இடமான போதைப் பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்பட்டதா என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

You May also like