கொரோனா வைரஸ் சந்தேகம்: மேலும் இருவர் கொழும்பில் அனுமதி!

இத்தாலியில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை காலை இலங்கை வந்த இரு இலங்கையர்கள் கொரோனா வைரஸ் சந்தேகத்தில் அவசரமாக கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இருவருக்கும் தொடரச்சியான இருமல் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டதன் காரணமாக அவர்களை வைத்தியசாலையில் சேர்ப்பதற்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, இத்தாலியில் கொரோனா வைரஸின் தாக்கத்தால் இதுவரை 17 பேர் பலியாகியுள்ளதுடன் சுமார் 655 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May also like