அமெரிக்கா அவுட்: ஒப்பந்தத்தை நிராகரிக்கிறது கோட்டா அரசு!

அமெரிக்காவுடனான எம்.சி.சி ஒப்பந்தத்தில் கைச்சாதிடாமல் இருப்பதற்கு இலங்கை அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.

அமைச்சரவை இதற்கான அங்கீகாரம் அளித்திருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இதனூடாக இலங்கை அரசாங்கத்திற்கு எம்.சி.சி ஒப்பந்தத்தின் ஊடாக பெறவேண்டியிருந்த 480 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இழக்கப்பட்டுள்ளது.

You May also like