தேர்தலே முக்கியம்: சுகாதார அமைச்சர் பவித்ரா

கொரோனா வைரஸினால் தேர்தலை ஒத்திவைக்க முடியாது. தேர்தலே முக்கியம் என்று கூறியுள்ளார் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி.

நாடு முழுவதிலும் கொரோனா தொற்று அச்சம் ஏற்பட்டுள்ள நிலையிலேயே அவர் இதனைக் கூறியிருக்கின்றார்.

தொலைக்காட்சி ஒன்றில் நடந்த நேர்காணலில் கலந்துகொண்ட அவரிடம் தேர்தல் தாமதமாகுமா என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, தேர்தலே முக்கியம் என்று கூறியிருக்கின்றார்.

இந்நிலையில் அமைச்சரின் இந்தக் கருத்துக்கு பல தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

You May also like