இத்தாலியில் இன்று செவ்வாய்க்கிழமை மாத்திரம் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன்படி இன்று மட்டும் 743 பேர் உயிரிழந்துள்ளதாக இந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் 5249 புதிய நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதேவேளை ஸ்பெயினிலும் மரண எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்து செல்கின்றது.