இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ்!

கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் வேரஹெர வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் தொழில்புரியும் இருவருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அந்த இருவரும் குறித்த மருத்துவமனையில் சென்றுவந்த பகுதிகள் சுத்தப்படுத்தப்படுகின்றதோடு சந்தித்த நபர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு குறித்த இருவரும் இன்று காலை கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

You May also like